இந்தியப் பெருங்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடி படகு! இலங்கை கடற்படையினரால் 14 பணியாளர்களின் சடலங்கள் மீட்பு
சீன மீன்பிடிக் கப்பல் (Lu Peng Yuan Yu 028) விபத்தில் காணாமல்போன 39 பணியாளர்களின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் இலங்கை கடற்படையினரால், 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பேரில் கடற்படை சுழியோடி குழுவுடன் கடற்படையின் கடல் ரோந்துக் கப்பலான SLNS விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளது.
சீன மீன்பிடிக் கப்பல்
இந்தநிலையில், இலங்கை கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர், முன்னதாக கடந்த (18.05.2023)ஆம் திகதி 2 பேரின் சடலங்களை மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன மீன்பிடிக் கப்பல் கடந்த (3.05.2023) ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் கெப்டவுனிலிருந்து புறப்பட்டு மாலைதீவுக்கு தெற்கு திசையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கப்பல் கண்காணிப்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
14 பேரின் சடலங்கள் மீட்பு
கப்பல் சீன நேரப்படி, கடந்த (16.05.2023) செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது கப்பலில் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களே காணாமல் போயுள்ளனர்.
தற்போது 14 பணியாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விபரங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you may like this Video

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
