சுவிஸ் வீதியொன்றில் இலங்கை நபர் மர்ம மரணம்: மக்களின் உதவியை கோரும் பொலிஸார்
சுவிட்சர்லாந்தில் இலங்கையரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
துர்கா மாநிலத்தின் வையின்பில்டன் பகுதியிலிருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மர்மமான முறையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் தெரிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
விசாரணைகள் முன்னெடுப்பு
34 வயதான இலங்கையர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

வீதியில் சலனமற்ற நிலையில் கிடந்த குறித்த நபரை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தடயவியல் மருத்துவ நிறுவகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri