பிரான்ஸில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கையர்!
பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரை நாடு கடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு அஞ்சு என்ற பாதாள உலக குற்றவாளியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஆவணங்களும் பிரான்ஸ் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் பொலிஸாரால் அந்த ஆவணங்கள் ஆராய்ந்த பின்னர் குடு அஞ்சுவை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயத்தில் இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திடம் இருந்து பெருமளவு ஆதரவு கிடைத்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஞ்சு இதுவரை செய்த குற்றங்கள், டுபாய், பிரான்சில் தங்கியிருந்து செய்த குற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் பிரான்ஸ் அரசுக்கு தெரிவிக்கவும் இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி இலங்கை நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகள் மற்றும் அஞ்சுவின் போதைப்பொருள் தொடர்பான வழக்கு அறிக்கைகள் உட்பட பிரான்சஸிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அஞ்சு தொடர்பில் பிரான்ஸுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, குறித்த போதைப்பொருள் கடத்தல்காரரை இலங்கைக்கு நாடு கடத்த பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும் என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒரு சில வாரங்களில் அஞ்சு இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என உயர் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.
You may like this video