வரித் திணைக்களத்திற்கு எதிரான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி

Sri Lanka Cricket Law and Order Court of Appeal of Sri Lanka Income Tax Return
By Kamal Aug 31, 2026 07:23 AM GMT
Report

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எதிராகத் தேசிய கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்த சட்டப் போராட்டத்தில் வீரர்களுக்குச் சாதகமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாக வீரர்களைக் கருதி, முன்நிகழ் நிபந்தனையுடன் வரி விதிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயத்தால் இன்று நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் முயற்சி

2024 அக்டோபரில், தேசிய கிரிக்கெட் வீரர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ‘ஊழியர்கள்’ என வகைப்படுத்தி, அவர்களுக்கு முன் கூட்டிய தனிநபர் வருமான வரியை விதிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முயன்றது.

தங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழியர்களாகக் கருதக் கூடாது என்றும், தாங்கள் பல ஆண்டுகளாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாகவே' அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளதாகவும் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

வரித் திணைக்களத்திற்கு எதிரான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி | Sri Lankan Cricketers Win Tax Battle

ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம், பணிக்கொடை, வருடாந்த விடுமுறை மற்றும் மகப்பேறு விடுமுறை போன்ற எந்தவொரு ஊழியர் சலுகைகளும் தங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பதை வீரர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.

இந்த முந்தைய திகதியிட்ட வரியை நடைமுறைப்படுத்தியதால் தங்களின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதாக 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த வீரர்கள் சத்தியக் கடதாசிகள் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

வீரர்கள் வரி செலுத்துவதை தவிர்க்கிறார்களா..

வீரர்கள் வரி செலுத்துவதைத் தவிர்க்க முயல்கிறார்கள் என்ற தவறான கருத்து பொதுமக்களிடையே நிலவியதாகக் ஆண் கிரிக்கெட் வீரர்களின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன குறிப்பிட்டார்.

வீரர்கள் வரி கட்டுவதைத் தவிர்க்கவில்லை என்றும், ஊழியர்களாகத் தவறாக வகைப்படுத்தப்பட்டு வரி வசூலிப்பதை மட்டுமே எதிர்த்து வழக்கு பதிவு செய்தார்கள் என தெளிவுபடுத்தினார்.

வரித் திணைக்களத்திற்கு எதிரான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி | Sri Lankan Cricketers Win Tax Battle

அண்மையில் உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் 'விளையாட்டு வீரர்கள்' அதிகாரப்பூர்வமாக 'சுயாதீன சேவை வழங்குநர்களாக' வகைப்படுத்தப்பட்ட போதிலும், அந்தத் திருத்தம் மனுதாரர்களுக்குப் பொருந்தாது என இறைவரித் திணைக்களம் வாதிட்டது.

எனினும், இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இறைவரித் திணைக்களத்தின் தீர்மானத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

ஆண் கிரிக்கெட் அணி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்

ஆண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் சட்டத்தரணிகள் ஷெனாலி டயஸ், சிதத் கஜநாயக்க ஆகியோருடன் சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமதிரத்ன முன்னிலையானார்கள்.

வரித் திணைக்களத்திற்கு எதிரான வழக்கில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி | Sri Lankan Cricketers Win Tax Battle

பெண் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ கப்ராலுடன் விகும் ஜெயசிங்க, மணித் தசநாயக்க ஆகியோர் முன்னிலையாகினார்கள்.

அரசுத் தரப்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்காக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மனோஹர ஜெயசிங்க முன்னிலையாகினார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி குவேர டி சொய்சா முன்னிலையாகினார். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: தாய்மார்களின் கதறல்களுக்கு தீர்வு இல்லையே..! ஐ.நா. பிரதிநிதி கவலை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: தாய்மார்களின் கதறல்களுக்கு தீர்வு இல்லையே..! ஐ.நா. பிரதிநிதி கவலை

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரவி கருணாநாயக்க

சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரவி கருணாநாயக்க


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US