இலங்கை கிரிக்கெட் அணிக்கான புதிய தெரிவுக்குழு அறிவிப்பு
தேசிய அணிகளை தெரிவு செய்வதற்காக இரண்டு வருட காலத்திற்கு புதிய ‘கிரிக்கெட் தெரிவுக்குழு’ ஒன்றை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் புதிய குழுவின் நியமனம் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி குழுவின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் உபுல் தரங்க(Upul Tharanga) நியமிக்கப்பட்டதோடு அஜந்தா மெண்டிஸ்(Ajantha Mendis), இந்திக டி சாரம்(Indika De Saram), தரங்க பரணவிதான(Tharanga Paranavitana), தில்ருவான் பெரேரா (Dilruwan Perera) ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணி வரலாற்றில் முதன்முறையாக இள வயதில் தெரிவு செய்யப்பட்ட குழு தலைவர் உபுல் தரங்க என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டு இலங்கைக்கான ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியைத் தேர்ந்தெடுப்பதே இந்த தேர்வுக் குழுவின் முதல் உத்தியோகபூர்வ பணி என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |