இலங்கை கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Sheron
in விளையாட்டுReport this article
இலங்கை அணியில் இருந்து பல மூத்த வீரர்கள் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து ஏனைய வீரர்களுடன் இவர்கள் ஆலோசித்து வருவதாகவும், இலங்கை கிரிக்கெட் சபைக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இவர்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலக்கிண்ணத் தொடரில் பங்கு பற்றிய இலங்கை அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றது.
ஏனைய போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்த இலங்கை அணி ரசிகர்கள் மற்றும் இலங்கை அரச தரப்பில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோப் குழு அழைப்பு
இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை கோப் குழு முன்னிலையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பை கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இதனை தெரிவித்துள்ளார்.



வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
