மெளலானாவுக்கூடாக கருணாவை அணுகிய ரணில்! பிள்ளையானுக்கு அதிகாரம் வழங்கிய இந்தியா(Video)
முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச 1990 ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் தமிழ் மக்களையும், முஸ்லீம் மக்களையும் பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டிருந்தார் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைப்புலிகள் அமைப்பினரை பிரிப்பதற்காக மெளலானாவுக்கூடாக ரணில் விக்ரமசிங்க கருணாவை அணுகியதாகவும், பிள்ளையானுக்கு அதிகாரம் இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
"முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் திட்டத்தில் முதலாவதாக ஊர்காவற்படை என்ற ஒரு இராணுவ கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த படையை உருவாக்கியதன் நிமித்தம் 1990 ஆம் ஆண்டு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த தாக்குதல் ஒரே நாளில் அம்பாறையில் ஆரம்பித்து ஆரையம்பதி வரை நீண்டு சென்றது.
இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சுடப்பட்டு எரிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட வரலாறு ஒன்று காணப்படுகிறது." என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
