ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையர்
இத்தாலியில் இலங்கையை சேர்ந்த ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி இரவு வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேபிள்ஸில் பகுதியில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 44 வயதான ஒருவரே கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
குடிபோதை
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குடிபோதையில், இரத்தம் தோய்ந்த முகத்துடன் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்டு முரண்பாடு காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இத்தாலிய பொலிஸார்
குறித்த நபர் விலா எலும்பு முறிவுகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் வீதியில் சென்றவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட தரப்பினரை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இத்தாலிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.





இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri
