பறக்கும் விமானத்தில் மோசமான செயலில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் - கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் மோசமாக செயற்பட்ட 49 வயதான இலங்கை பயணியே கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயது தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை தகாத ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான பணிப்பெண்
கைது செய்யப்பட்டவர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கப்பலில் கேப்டனாக பணி புரியும் இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று காலை 09.00 மணிக்கு எமிரேட்ஸ் விமானமான EK-650 இல் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
விமானத்தில் வந்தபோது, அவர் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாகவும், விமானத்தில் பணி புரிந்த தென்னாப்பிரிக்க விமான பணிப்பெண்ணை தகாத ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
