வெளிநாடு ஒன்றில் எல்லையோரத்தில் இலங்கையர் குழுவொன்று கைது
இலங்கையர்கள் 7 பேர் ஜோர்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 7 இலங்கையர்களும் நேற்று(16.08.2023) எல்லை தாண்டிய வேளையில் கைது செய்யப்பட்டதாக ஜோர்தான் இராணுவ இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையர்கள் கைது
ஜோர்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட 7 இலங்கையர்களும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில், ஜோர்தான் - இஸ்ரேல் எல்லையில் இஸ்ரேலில் பணிபுரிய ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் துருக்கியைச் சேர்ந்தவர்கள் அங்கீகரிக்கப்படாமல் நுழைந்ததாக பல வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த வருடம்
கடந்த வருடம் இஸ்ரேலுக்குள் பிரவேசிக்க முயன்ற 52 பேர் கைது செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 23 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.