பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை
பிரித்தானியாவில் தகாத செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
42 வயதான கமலாதாசன் யோகராஜா என்பவருக்கு 28 மாத சிறைத்தண்டனையும், 10 ஆண்டுகளுக்குப் தகாத செயற்பாட்டு குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கையர் லண்டனில் இருந்து லிவர்பூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் இளம் பெண்களிடம் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள்
மதுபோதையில் இருந்து குற்றவாளி, குறித்த இரண்டு பெண்களும் உறங்கத்தில் இருந்து நேரத்தில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் விழித்துக் கொண்ட பின்னரே குற்றவாளி தனது தகாத செயற்பாட்டை நிறுத்தியதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டை கடுமையாக சாடியுள்ள நீதிபதி, குற்றவாளிக்கான தண்டனையை அறிவித்தார்.
இந்த சம்பவம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 18ஆம் திகதி லிவர்பூல் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கமலாதாசன் யோகராஜா பிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள நிலையில், அதற்கான முடிவுக்காக காத்திருக்கும் ஒரு அகதி என்பது குறிப்பிடத்தக்கது.