கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர் கைது - பொதிகளில் மர்ம பொருள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை பயணி ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்கத்தின் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
உலர்ந்த சாயம் பூசப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட விலங்குத் தோல்களை சட்டவிரோதமாக, விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள வணிகர்களுக்காக வழி ஊடாக கடத்த முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விலங்குத் தோல்
கைது செய்யப்பட்டவர் கொழும்பில் வசிக்கும் 37 வயது வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தாய்லாந்தில் இருந்து இந்தியா சென்று, அங்கிருந்து நேற்று இரவு 11.05 மணிக்கு இண்டிகோ விமானம் 6.E.- 1167 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சுங்க அதிகாரிகள்
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மற்றும் விலங்கு நோய்கள் தொடர்பான பிற கட்டளைகளை மீறி முதலை, மலைப்பாம்பு, பிற ஊர்வன மற்றும் பிற விலங்குத் தோல்களின் 19 துண்டுகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சந்தேக நபர் விலங்குத் தோல்களை துணிகள் என்று கூறி சுங்க அதிகாரிகளை தவறாக வழிநடத்த முயன்றுள்ளார். மேலும் சுங்க அதிகாரிகள் அவரது பொதிகளை பரிசோதித்த பின்னர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam