அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞனின் ஆபத்தான செயல் - பலர் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Accident Arrest
By Vethu Oct 05, 2026 01:59 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் நியூகாஸ்ல் பகுதியில் ரக்பி லீக் ரசிகர்களின் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் மூன்று 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கையை பின்புலமாக கொண்ட 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர் இந்திக்க சமரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இளைஞனின் ஆபத்தான செயல்

இதில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி கடுமையான காயத்தை ஏற்படுத்தியமை மற்றும் தவறான நடத்தையால் காயத்தை ஏற்படுத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் அடங்கும்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞனின் ஆபத்தான செயல் - பலர் வைத்தியசாலையில் அனுமதி | Sri Lankan Arrested In Australia

மிகவும் தீவிரமான ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது என்ற குற்றச்சாட்டுக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமரசிங்க ஒக்டோபர் 15ஆம் திகதியன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சனிக்கிழமையன்று காலை சுமார் 9.30 மணியளவில் நியூகாஸ்ல் லிங்க் வீதியில்உள்ள Transfield Avenue பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.

அங்கு நியூகாஸில் நைட்ஸ் அணியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர், தங்கள் நகரத்தின் NRL அணியினரை வழியனுப்பி வைப்பதற்காகக் கூடியிருந்தனர்.

இதன் போது வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர், பல ஆதரவாளர்கள் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டாய பரிசோதனை

2 முதல் 67 வயதுக்குட்பட்ட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சையைப் பெற்ற பிறகு ஜான் ஹண்டர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை இளைஞனின் ஆபத்தான செயல் - பலர் வைத்தியசாலையில் அனுமதி | Sri Lankan Arrested In Australia

சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, கட்டாயப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகக் கருதப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்படுவதற்கு முன்பு வாகனம் முறையற்ற விதத்தில் ஓட்டப்பட்டதாகவும், அங்கிருந்த கூட்டத்தினர் அவர்கள் மீது ஆவேசமாகத் திரும்பியதைத் தொடர்ந்து ஓட்டுநரையும் இரண்டு பயணிகளையும் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்ற வேண்டியிருந்ததாகவும் உதவி ஆணையர் டேவிட் வாடெல் கூறினார்.

கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்களில் அந்த ஓட்டுநரும் ஒருவராகத் தோன்றியதாகவும், அவர் வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்றும் நியூகாஸில் நகர மேயர் கேவின் மோரிஸ் தெரிவித்தார்.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US