பறக்கும் விமானத்தில் குழப்பம் விளைவித்த இலங்கையர் : பொலிஸாரால் கைது
சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
வருகையின் போது, சந்தேக நபர், அதிக மது போதையில் இருந்த நிலையில், விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அதன்படி, இரண்டு விமானப் பணிப்பெண்களும் விமானத்தின் விமானியிடம் சம்பவம் தொடர்பில் புகாரளித்ததைத் தொடர்ந்து, அவர் குறித்து கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அவர் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க பொலிஸாரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு விமான பணிப்பெண்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த சம்பவம் இலங்கை வான்வெளிக்குள் நடந்ததால், சந்தேக நபர் இன்று (16) கொழும்பு எண் 01 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நிலாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிய அண்ணன்-தம்பிகள்... அடுத்து எடுத்த முடிவு, அய்யனார் துணை எபிசோட் Cineulagam
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri