வெளிநாடு ஒன்றில் மிகவும் மோசமாக செயற்பட்ட இலங்கையர் கைது - மாய மந்திரங்களால் ஏற்பட்ட விபரீதம்
பேங்கொக் நகரத்தில் அயலவரிடம் மிக மோசமாக செயற்பட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் அயல் வீட்டாரைத் தாக்கி, கண்ணாடிப் போத்தலைத் தலையில் அடித்து உடைத்து, உடைந்த கண்ணாடியால் குத்தியமையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தனக்கு பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் மாய மந்திரங்களை செய்தமையினால் தான் இவ்வாறு செயற்பட்டதாக இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் மாலை 6:30 மணியளவில் ஐந்தாவது மாடியில் உள்ள தனது அறையில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது யாரோ தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்துள்ளார். கதவை திறந்த போது குறித்த இலங்கையர் மற்ற வீட்டின் கதவை தட்டியுள்ளார். எனினும் அதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட நபரின் வீட்டு கதவையும் பல முறை தட்டியுள்ளார்.
திடீரென தனக்கு அருகில் வந்த இலங்கையர் திடீரென கண்ணாடிப் போத்தலால் தலையில் தாக்கியதுடன், உடைந்த கண்ணாடியால் தன்னை குத்தியதாக பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் இலங்கையருடன் தனக்கு எவ்வித பழக்கமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பாதிக்கப்பட்ட நபர் மந்திரம் செய்தமையால் தனது காலில் வலி ஏற்பட்டுள்ளதாகவும் இதனாலேயே தான் தாக்கியதாகவும் அவர் இலங்கையர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பேங்கொக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You My Like This Video