வெளிநாட்டுக்குச் செல்வதற்காக காத்திருந்த ரஜனிக்கு எமனாக மாறிய இராணுவக் காவலர்கள்
தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் செய்த படுகொலைகளில் ரஜனி என்ற பெண்ணின் கொலை மிகவும் பெரிதளவில் பேசப்பட்டது.
தனது தாயார் மற்றும் உறவினர்களுடன் இணைந்து கொள்வதற்காக வெளிநாட்டுக்கு பயணமாக தயாராக இருந்த ரஜனி வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களையும் செய்து முடித்துக்கொண்டு மானிப்பாய் பகுதியிலுள்ள தனது உறவினர்களுக்கு பயணம் பற்றி கூறுவதற்காக பல்கலைக்கழக இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியிலுள்ள காவலரண் ஊடாகச் சென்ற பின்னர் வீடு திரும்பவில்லை.
ரஜனியை தேடிய அவர் அண்ணன் உட்பட உறவினர்கள் அவரை தேடிய பின்னர் பொலிஸாரிடமும் முறையிட்டனர்.
காணாமல் போய் இரண்டு கிழமைகள் ஆகிய நிலையில் கோண்டாவில் பேருந்து டிப்போவுக்கு பின்புறமாக உள்ள மக்கள் வசிக்காத வீடு ஒன்றிலிருந்து பாதி திறந்து அரைகுறையாக மூடப்பட்டிருந்த மலக்குழி ஒன்றினுள் ரஜனி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
வீதியால் சென்ற ரஜனியை மறித்து காவலரணுக்குள் வைத்திருந்து விட்டு பின்னர் ஆட்கள் அற்ற வீட்டுக்குள் தூக்கிச் சென்று ஆறு இராணுவத்தினர் மாறி மாறி ரஜனியை கொடூரமாக சிதைத்துள்ளார்கள். ஐந்தாவதாகவும், ஆறாவதாகவும் ரஜனியை துன்பப்படுத்திய இராணுவச் சிப்பாய்களே அரச சாட்சியாக மாறினார்கள்..
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ... வாழ்த்தும் ரசிகர்கள் Cineulagam

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
