ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்!
ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை தூதுவர் ஷாராஹ் ஹல்டன் ( Sarah Hulton OBE) மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை தூதுவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் இருவருக்கிடையில் இன்று சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.
இச் சந்திப்பின் போது இலங்கையின் சமகால நிலைமைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உட்பட உலகலாவிய ரீதியில் ஏற்பட்ட கோவிட் பாதிப்பினால் பொருளாதாரம் மற்றும் ஏனைய துறைகளில் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் அதனால் மக்கள் எதிர்நோக்கும் சமூக,பொருளாதார தாக்கங்களை நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தானிய தூதுவரிடம் தெளிவுப்படுத்தியுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற காணி அபகரிப்பு, பிரதேச செயலக எல்லை நிர்ணயம் மாற்றங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியதோடு அது தொடர்பிலான ஆவணங்களும் பிரித்தானிய தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri