Sri lankan Airlines மீது சைபர் தாக்குதல் - கப்பம் கோரல் தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவையின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மீது ஹேக்கர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என நிறுவனம் மறுத்துள்ளதுடன், அது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூன் 29 ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மீது ஹேக்கர் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளியானது.
அது தொடர்பான விசாரணைகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
சைபர் தாக்குதல்
அதற்கமைய, விமானச் சேவையின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் அல்லது இயக்க முறைமைகளுக்குள் அத்துமீறி நுழைந்தமை, தகவல்களுக்குச் சேதம் ஏற்படுத்தப்பட்டமையோ, தரவுகள் சட்டவிரோதமாக பெறப்பட்டமை அல்லது சேவைகள் மற்றும் விமான இயக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டமை போன்றவைகள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், மின்னஞ்சல் சேவைகள் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளும் சேவைகளும் எவ்விதத் தடங்கலுமின்றி செயற்பட்டுள்ளது.
அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விமானச் சேவையின் செயல்பாடுகளுக்கு அல்லது சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
எந்தவொரு தரப்பிலிருந்தும் பிட்கொயின், அமெரிக்க டொலர் அல்லது வேறு எந்த வடிவத்திலும் கப்பம் கோரப்பட அல்லது பெறப்படவில்லை.
மேலும், அத்தகைய தொகை அல்லது கொடுப்பனவு தொடர்பாக எவ்வித கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
எனவே, தமது கட்டமைப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவோ அல்லது ஹேக்கர்களின் கட்டுப்பாட்டின் கீழ் அவை காணப்படுவதாகவோ சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரிக்கின்றோம்” என அந்த அறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர் இதோ Cineulagam
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan