அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணுக்கு பெருந்தொகை டொலர் அபராதம்
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகர் ஹிமாலி அருணதிலாவுக்கு பெருந்தொகை டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்த பெண்ணுக்கு உரிய சம்பளம் மற்றும் விடுமுறையை வழங்காத குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக ஹிமாலி அருணதிலக்க பணியாற்றியுள்ளார்.
இலங்கை பெண்ணுக்கு அபராதம்
அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்பதும், அவருக்கு திட்டமிட்டபடி விடுமுறை வழங்கப்படவில்லை என்பதும் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சட்டவிரோதச் செயலை உள்நாட்டலுவல்கள் திணைக்களம் அறிந்திருந்தும், அது தொடர்பான சட்டத் திணைக்களங்களுக்கு அறிவிக்கவில்லை என நீதிமன்றில் தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் முன்னாள் பிரதி உயர்ஸ்தானிகராக பணியாற்றிய ஹிமாலி அருணதிலக்க என்ற பெண்ணை, பாதிக்கப்பட்ட பணியாளருக்கு 543,000 டொலர்களை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமது வீட்டுப்பணியாளர் ஒருவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்ததுடன், மூன்று வருடங்களில் இரண்டு நாட்கள் மட்டும் விடுமுறை வழங்கிய இலங்கை இராஜதந்திரி ஒருவரை முறையாக ஆய்வு செய்யத் தவறியதற்காக, உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தை அவுஸ்திரேலிய பிராந்திய நீதிமன்ற நீதிபதி கடுமையாக சாடியுள்ளார்.