சவூதியில் சிக்கியிருக்கும் பெருமளவான இலங்கை பணிப்பெண்கள்! - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
சவூதி அரேபியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கை பெண்களை நாட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கை பெண்கள் குறித்த விவரங்களை சர்வதேச பொது மன்னிப்பு சபை அண்மையில் வெளியிட்டிருந்தது.
சவூதி அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், இலங்கை பெண்களை விடுவிக்க சவூதி ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இலங்கையில் விமானத்தை தரையிறங்க அனுமதிக்க அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
இதன்படி, சவூதி அரேபியாவில் தடுப்பு முகாம்களில் உள்ள 156 இலங்கை பெண்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
