இலங்கை பெரும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்! - சர்வதேச ஃபிட்ச் மதிப்பீடு எச்சரிக்கை
இலங்கை தற்போது ஒரு பெரிய வெளிநாட்டு இருப்பு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும், இது 2023க்குள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஃபிட்ச் மதிப்பீடுகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை தனது வெளிநாட்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது போகும் எனவும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபிட்ச் மதிப்பீடுகளின்படி, இலங்கையின் பொது மற்றும் வெளிநாட்டு நிதி நவம்பர் 2020 முதல் கீழ்நோக்கிச் செல்கிறது, இது இலங்கையை சிசிசி வகைக்கு தரமிறக்கச் செய்தது.
தரமிறக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2023 க்குள் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறையும்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை தொடர்ந்தும் மறுத்து வருவதால் வருங்காலங்களில் கடுமையான அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஃபிட்ச் மதிப்பீடு எச்சரித்துள்ளது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri