15 நாட்களில் 90ஆயிரம் வெளிநாட்டவர்களை வரவேற்ற இலங்கை
2025 ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் மாத்திரம், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 93,915 என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம்(Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.
தரவுகளின்படி, இதில் இந்தியாவில் இருந்து மொத்தம் 18,220 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 11,425 பேரும், ரஸ்யாவிலிருந்து 8,705 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 6,604 பேரும்;, ஜெர்மன் நாட்டில் இருந்து 7,746 பேரும் கடந்த 15 நாட்களில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இந்தநிலையில், 2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 816,191 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 136,535 பேர் இந்தியாவிலிருந்தும், 102,273 பேர் ரஸ்யாவிலிருந்தும், 81,130 பேர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்தும் வந்துள்ளனர்.
இதேவேளை 2025 மார்ச் மாதத்தில் மொத்தம் 229,298 வெளிநாட்டினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர், இது 2024 மார்ச் மாத தரவுகளுடன் ஒப்பிடுகையில் 9.62 வீத அதிகரிப்பாகும் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
