திருமணத்திற்கு தயாரான காதலர்கள் - காதலிக்கு நடந்த கொடூரம்
நிட்டம்புவ, எல்லக்ல பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக தாக்கிய காதலனை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
காதலனால் படுகாயமடைந்த 29 வயதான காதலி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
திருமணம்
எதிர்வரும் நாட்களில் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இருவரும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில் காதலன் என கூறப்படும் இளைஞன் மது அருந்தியுள்ளார்.
அப்போது, காதலியின் கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு முன்னதாக வந்த அழைப்பு ஒன்றின் எண்ணை காதலன் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாக்குவாதம்
இருவருக்குமிடையில் வாக்குவாத ஏற்பட்டதையடுத்து காதலன் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.
இந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் இருவருக்கும் இடையில் கடந்த காலங்களில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
