நீண்ட வறட்சியின் பின்னர் மட்டக்களப்பில் கனமழை(Video)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது.
கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வந்தனர்.
பலத்த மழை
இந்த வறட்சி நிலைய காரணமாக விவசாயிகளும் பண்ணையாளர்களும் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வந்தனர்.
மேலும், அதிக வெப்பமான காலநிலை காரணமாக இன்னல்களை எதிர்கொண்டுவந்த நிலையில் இன்றைய தினம்(28.08.2023) மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்வதை காணமுடிகின்றது.
இந்நிலையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைபெய்வதன் காரணமாக அவதானமாக செயற்படுமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
நீண்டகாலத்தின் பின்னர் கடுமையான வறட்சியான காலநிலைக்கு மத்தியில் இன்று மழைபெய்வதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
