யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தவரை மக்கள் புறகணிக்கமாட்டார்கள்! சாகர சூளுரை-செய்திகளின் தொகுப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தவறிழைத்தாரே தவிர பொதுஜன பெரமுன தவறிமைக்கவில்லை.
வெகுவிரைவில் தேர்தல் ஒன்று இடம்பெறும். ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அடிமட்ட மக்கள் ஆதரவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2016 ஆம் ஆண்டு உதயமானது. நல்லாட்சி அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2028 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என தொடர்ந்து மக்களாணையை உறுதிப்படுத்தினோம்.
30 வருடகால பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்த ராஜபக்சர்களை பெரும்பாலான மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கமாட்டார்கள்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,



