சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவிய இலங்கை
இங்கிலாந்து அணிக்கு எதிரான சர்வதேச ஓருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
இலங்கை அணியும் இங்கிலாந்து அணியும் சந்தித்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 53 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.
இதன்படி இந்த ஓருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீா்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்களை மட்டும் இழந்து 357 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பில் ஹேரி ப்ரூக் (Harry Brook) 66 பந்துகளில் 136 ஓட்டங்களையும் ஜோ ரூட் (Joe Root) ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க, தனஞ்சய டி சில்வா மற்றும் ஜிப்ரி வென்டர்செய் ஆகியோர் தலா ஓரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 304 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்காண்டது.
இதில் பவன் ரத்நாயக்க (Pavan Rathnayake) 114 ஓட்டங்களைப் பெற்றுக்காண்டார்.
பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜெமி ஒவர்டன், லியனம் டொவ்சன், அதில் ராசீத் மற்றும் வில் ஜெக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam