இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் விசா அபராதம் குறைப்பு
இலங்கையில் விசா காலாவதியான வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் 500 டொலர் அபராதத்தை 250 டொலர்களாக குறைக்க பொது பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.
இந்த அபராதத் தொகையால் சுற்றுலாத்துறைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து வெளிநாட்டவர்களிடம் இருந்து வந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற விவாதத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சகம்
விசா காலாவதியாகி ஒரு மணித்தியாலத்திலேயே சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த அபராதம் விதிக்கப்படுவது மிகவும் அநியாயமானது எனவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதம் காரணமாக சில சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட விரும்பவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சகம் அவ்வப்போது கருத்துக்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |