நாட்டில் டொலர் நெருக்கடி! வாகன இறக்குமதி தடை செய்யப்படுமா..
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடியைக் கட்டுப்படுத்த இந்த அரசாங்கம் வாகன இறக்குமதியை தடை செய்திருக்கலாம். மாறாக வரியை அதிகரித்து மக்களுக்கு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யும் இயலுமையை இல்லாது செய்திருக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டில் தற்போது டொலரின் பெறுமதி 330 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திறைசேரியின் இருநது 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளன.
வாகன வரி அதிகரிப்பு
என்.டி.பி வங்கி, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் போன்ற நிறுவனங்களில் இருந்து பாரியளவில் டொலர் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் எவ்வித விளக்கத்தினையும் அரசாங்கம் வழங்கவில்லை.
மேலும், அரசாங்கம் தற்போது இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 50 வீத வரி அதிகரிப்பை அறிவித்துள்ளது. டொலரை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு வாகனம் இறக்குமதி செய்வதை தடை செய்திருக்கலாம்.

அதனை செய்யாமல், வாகனங்களுக்கான வரியை அதிகரித்து, மக்களுக்கு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய முடியுமாகி இருந்த அந்த இயலுமையை இல்லாமல் செய்திருக்கிறது.
தற்போதைய இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயணித்த வழியிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது. அனுபவமற்ற கோட்டாபய ஜனாதிபதியாகி நாட்டை வங்குரோத்தாக்கியது போலவே அநுரகுமார திஸாநாயக்கவும் தற்போது செயற்பட்டு வருகின்றார் என குறிப்பிட்டுள்ளார்.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri