இலங்கையில் அதிகரிக்கும் பெரும் நெருக்கடி! கோழி - மீன் இல்லாவிட்டாலும் மறக்கறி கூட சாப்பிட முடியாத சோகம் (Video)
மலையகம் என்பதும், மலையக தமிழர்கள் எனக் ௬றுவதும், சந்ததி, சந்ததியாக உழைத்த மக்களின் உழைப்பை அடையாளப் படுத்தும் ஒரு சமூகத்தின் வரலாற்று குறியீடே ஆகும்.
உழைக்கும் சமூகமாக மட்டுமல்லாமல் வரலாறு முழுவதும் உரிமைகள் மறுக்கப்பட்டுவரும் ஒரு தேசிய இனமே மலையக மக்கள். உடம்பில் ஏறும் அட்டையினைப் பிடுங்கி எறிவதா? கூடையில் கொழுந்தினை நிரப்புவதா? என ஒவ்வொரு நொடி பொழுதும் மலையக மக்கள் தங்களது வாழ்க்கையினை போராடியே கழிக்கின்றனர்.
அன்றாட உணவை கூட போசாக்காக எடுத்துக் கொள்வதில் கூட பெரும் போராட்டத்தையே சந்திக்க வேண்டியதாக உள்ளது என கவலை தெரிவித்துள்ளனர்.
தாயொருவர் கூறுகையில், “கோழி இறைச்சி - மீன் என இல்லாவிட்டாலும் கூட மரக்கறி கூட சாப்பிட முடியாத நிலையே காணப்படுப்படுவதாக” தமது வருத்தத்தை சோகம் தோய்ந்த குரலில் வெளிப்படுத்துகின்றனர்.
‘‘எங்கள் பிள்ளைகள் எங்களை போல வந்துவிடக்கூடாது‘‘ என போராடும் மலையக தாய்மார்களின் உளக்குமுறல்களை சுமந்து வருகிறது எமது லங்காசிறியின் கதை கேளு நிகழ்ச்சி,