மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் ஆரம்பமான நடைபவனி
'வேர்களை மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையகம்' எனும் தொனிப் பொருளில் தலைமன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட நடைபவனிக்கு வலுச் சேர்க்கும் முகமாக மட்டக்களப்பிலும் நடைபவனி ஆரம்பமாகியுள்ளது.
இந்த நடைபவனி மட்டக்களப்பு - வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று (08.08.2023) காலை ஏழு முப்பது மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உரிமைகள் வழங்கப்பட வேண்டும்
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபவனியானது, மதியம் 12 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நிறைவடைய உள்ளது.
200 வருடங்களாக ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வரும் மலையக மக்களது உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து குறித்த நடை பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
