மலையக மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாரில் நடைபவனி (Photos)
'வேர்களை மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையக மக்களின் நடைபவனி'க்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நடை பவனி நேற்று (30.07.23) மதியம் 3 மணியளவில் தலைமன்னாரில் ஆரம்பமானது.
தலைமன்னாரில் ஆரம்பமான நடை பவனி தலைமன்னார் - பேசாலை ஊடாக மன்னாரை வந்தடைந்துள்ளது.
மலையக மக்களுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாகக் குறித்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றுள்ளது.
உரியக் கல்வியைக் கொடுங்கள்
இந்த நிகழ்வில் நான்கு மத தலைவர்கள், மலையக மக்கள், சமூக ஆர்வலர்கள் மன்னார் வாழ் மக்கள் உட்படப் பலர் கலந்து கொண்டு மலையக மக்களுக்கான தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
குறித்த நிகழ்வில் மலையக மக்களைச் சமமான பிரஜைகளாக அங்கி கரிங்கள், மலையக மக்களின் உணர்வுகளை மதித்து நடவுங்கள், மலையக மக்களின் பிள்ளைகளுக்கு உரியக் கல்வியைக் கொடுங்கள், மலையக அரசியல் தலைவர்களே மலையக மக்கள் தலை நிமிர வழி செய்யுங்கள், மலையக மக்களுக்கு தனித்தனியாகக் குடியிருப்புகளை அமைத்துக் கொடு போன்ற பல்வேறு வாசகங்கள் ஏந்தி மலையக மக்களை வரவேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.














