'மலையகம் 200' முத்திரை: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பை கௌரவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதற்காக 'மலையகம் - 200' எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
முத்திரை
இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அந்த முத்திரை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அதில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் எவை என்பன குறித்து மக்களிடமிருந்தும் கருத்துகள் மற்றும் யோசனைகள் கோரப்பட்டுள்ளன.
மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இந்த வடிவமைப்பு மலையக கலை, கலாசார பண்பாட்டு மற்றும் பாரம்பரிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களிடமிருந்து ஏதேனும் யோசனை அல்லது முத்திரையில் மாதிரி ஆக்கங்களை சித்திரங்களாக உரிய வகையில் எதிர்வரும் மே 10 ஆம் திகதிக்குள் கீழ்வரும் முகவரிக்கு 'பதிவு' தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு
இலக்கம் 45,
புனித மைக்கல் வீதி ,
கொழும்பு - 03

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
