இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை
ஐ.நா பாகாப்புச்சபைக்கு இலங்கையை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் வி.பி.லிங்கஜோதி தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமை சபையின் 51வது கூட்டத்தொடர் நேற்று (12.09.2022) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை தொடர்பிலான அறிக்கையின் இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை சபை இதுவரை தீர்க்கமான அணுகுமுறையில் செயற்படவில்லை என்று நாங்கள் நம்புகின்றோம்.
போர் குற்றங்கள்
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் இலங்கை பொறுப்புக் கூற வேண்டும்.
இலங்கை தொடர்பில் ஐ.நா 30/1, 46/1 தீர்மானங்களை கொண்டு வந்த போதிலும் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளவில்லை.
போரின் போது படுகொலை செய்யப்பட்டமைக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலும் நீதி தேடும் தமிழர்கள் இன்றுவரை விரக்தியடையவில்லை.
இலங்கை ஆயுதபடையால் அபகரிப்பு
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் ஓர் அங்கமாக தமிழர் நிலங்கள் தொடர்ந்து இலங்கை ஆயுதபடைகளால் அபகரித்து வருவதோடு, சிங்கள குடியேற்றங்களை மேற்கொண்டும் வருகின்றது.
இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் கால அவகாசம் கொடுக்காமல், விரைந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்வதோடு, தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை தடுக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் வேண்டுகின்றேன்.
இலங்கையை பொறுப்புக்கூற வைக்க, ஐ.நா பாதுகாப்பு சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வேண்டுவதோடு தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
