மது போதையில் வாகனம் செலுத்திய இ.போ.ச சாரதி: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
மன்னாரில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தை மது போதையில் ஓட்டி சென்ற சாரதியை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன் தினம் (18.10.2023) மாலை தலைமன்னார் நோக்கி பயணிகளுடன் சென்ற பேருந்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில் மன்னார் போக்குவரத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நீதவான்
இதன்போது குறித்த சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமை உறுதி செய்யப்பட்ட நிலையில் சாரதியை நேற்றைய தினம் (19.10.2023) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சாரதியை எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri