இலங்கை வந்த இத்தாலி தம்பதியை நெகிழ வைத்த இளைஞன்
இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்த இத்தாலி தம்பதியை இலங்கை இளைஞன் ஒருவர் நெகிழ வைத்துள்ளார்.
இலங்கையின் அழகை ரசிக்க வந்த தம்பதி நாட்டை விட்டு வெளியேறும் போது உடன் இருந்த இளம் சுற்றுலா வழிகாட்டியிடம் கண்ணீருடன் விடைபெற்றுள்ளனர்.
குறித்த தம்பதி வழிகாட்டிய இளைஞன் ஒருவரை கட்டி அணைத்து உணர்ச்சிவசப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி தம்பதி
மிகவும் நம்பகமான தரமான சேவையை வழங்கிய இலங்கை இளைஞன், இத்தாலிய தம்பதியினரின் கண்களில் கண்ணீரை வரவழைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.
குறித்த இத்தாலி தம்பதி காலி, மிரிஸ்ஸ, யால தேசிய பூங்கா, எல்ல, கண்டி, சிகிரியா, அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்குச் செல்வதற்காக கடந்த 8 ஆம் திகதி இலங்கை வருகை தந்தனர்.
சுற்றுலாத் துறை
அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக 26 வயதான லஹிரு தில்ஷான் மதுசங்க என்ற இளைஞன் செயற்பட்டுள்ளார்.
அந்த இளைஞனிடம் விடைபெறும் நேரத்தில் விமான நிலையத்தில் ஏற்பட்ட உணர்ச்சிகரமான தருணம், இந்த நாட்டின் சுற்றுலாத் துறையில் ஒரு நபர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
