இலங்கையில் டொலர் அதிகரிப்புக்கு செய்ய வேண்டியது இதுவே!
“எமது நாட்டில் டொலர் அதிகரிப்பை ஏற்படுத்துவதற்கு அடிப்படையானது சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதே” என தையன் லாங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
எமது லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“சுற்றுலாத்துறையில் பல புதிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும் அவற்றின் ஊடாக சுற்றுலாப்பயணிகளை கவர வேண்டும். கடந்த 30, 40 வருடங்களுக்கு மேலாக எமது நாட்டில் சுற்றுலாத்துறையில் எவ்வித மாற்றங்களும் இன்றியே காணப்படுகின்றது.
எமது நாட்டில் பல வளங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பாவிக்கப்படாமல் இருக்கின்றது” எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் அவர் தெரிவித்த முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,