தொடர்ச்சியாக ஒரே கேள்வியை சஜித் வினவுவதாக சாடியுள்ள பிமல் ரத்நாயக்க
கொலைக்கலாசார போக்கு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்தி இந்த குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி எடுக்கும் நடவடிக்கைகள் என்ன எனவும் அவர் வினவியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை வினவியுள்ளார்.
பொருளாதார பாதிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இது பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையும். எனவே இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, தேசியப் பாதுகாப்பு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் எதிர்க்கட்சி தலைவர் மாத்திரமே இது குறித்து தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருவதாகக் கூறியுள்ளார்.
பயணிகள் வருகையை தடுக்கும் முயற்சி
தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக்கூறி கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பலமுறை பதிலளிக்கப்பட்டுள்ள ஒரு கேள்வியைத் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதால் எந்த பயனும் இல்லை எனச் சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |