ஜேர்மனியில் இருந்து இலங்கை வந்தவர் பரிதாபமாக மரணம்
ஜேர்மனில் இருந்து இலங்கை சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகமவிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
69 வயதான ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் களுத்துறை பிரதேசத்தில் உள்ள நண்பர் ஒருவரின் ஊடாக பண்டாரகம ரம்புக்கன விஜய குமாரதுங்க மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு நேற்று முன்தினம் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு வெளிநாட்டுப் பிரஜைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அங்கு வசிக்கும் பெண்ணால் அவர் பண்டாரகம வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
பின்னர் ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் ஜெர்மனி நாட்டவர் சிகிச்சை பலனின்றி சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri