இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருங்கி வரும் இராஜதந்திர இணக்கம்!
திருகோணமலையின் 12ஆயிரம் கிலோ லீற்றர் கொள்ளவு கொண்ட எண்ணெய் தாங்கி பண்ணைகளை கூட்டாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பில இதனை இந்திய செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இலங்கை முன்வைத்த யோசனையை இந்திய தரப்பு, நிராகரித்ததாக நேற்று(26) தமிழ் வின்னில் பதிவு செய்யப்பட்ட செய்தியின் பிந்திய தகவலாகவே இந்த இணக்க தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இணக்கத்துக்கான பேச்சுவார்த்தைகள், கடந்த 16 மாதங்களாக இடம்பெற்று வந்தன. இந்தநிலையில் தற்போது இறுதி முடிவுக்கான இணக்கத்தை நெருங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இன்னும் ஒரு மாதத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உடன்பாட்டை செய்துகொள்வதற்காக Trinco Petroleum Terminal Ltd என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படும் என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்தியாவிடம் கோரப்பட்டுள்ள உதவிக்கும், திருகோணமலை எண்ணெய் பண்ணை உடன்படிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “திருகோணமலை” உடன்படிக்கை, இரண்டு நாடுகளுக்கும் இடையில் புதிய ராஜதந்திர முன்னேற்றத்தை கொண்டு வரும் என்று அரசியல் தரப்புக்கள் கூறுகின்றன.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam