அமெரிக்காவின் அழைப்பு: இலங்கை குழு மீண்டும் செல்கிறது
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம், விடுத்த அழைப்புக்கு இணங்க, இலங்கை தூதுக்குழு வோசிங்டனில் விரைவில் நடைபெறும் கலந்துரையாடல்களில் பங்கேற்கவுள்ளது.
இந்தநிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான, இரண்டாவது நேரடி சந்திப்பாக இது அமையவுள்ளது.
இலங்கை குழு
தற்போதைய பொருளாதார முன்னுரிமைகளின் அடிப்படையில், வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கைக்கு சாதகமான விளைவுகளைப் பெறுவதற்கும் இதன்போது எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னோடியாக, குறித்த தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளனர்.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும் வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹலங்கமுவ, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க,நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன, சட்டமா அதிபர் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்மல் விக்னேஸ்வரன் மற்றும் வெளியுறவு அமைச்சின் தர்சன பெரேரா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் முக்கியப் பங்கேற்றனர்.