நான்கு மாதங்களாக தடைப்பட்டுள்ள திரிபோஷா விநியோகம்!
போஷாக்கு குறைப்பாடுள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய் மார்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா விநியோகம் சுமார் நான்கு மாதங்களாக செயலிழந்திருந்த நிலையில் வலையமைப்பு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, ஜனவரி மாதம் மேல் மாகாணத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட 250 மெட்ரிக் டொன் சோளத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட திரிபோஷா இருப்பு ஏற்கனவே கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
விநியோகப்பட்டுள்ள பகுதிகள்
கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பல மாவட்டங்களில் திரிபோஷா விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக தலைவர் உறுதிப்படுத்தினார்.
சோளத்தை கொள்முதல் செய்வதில் உள்ள சிரமம் காரணமாக, தற்போது கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 3 முதல் 5 வயது வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தேவையான திரிபோஷாவை உற்பத்தி செய்வதற்கான மாற்று முறையாக நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் வெள்ளை பச்சரிசியைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam