மதில் பாயும் ஆசிரியர் வளவாளரானது எப்படி..! இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி
யாழ்ப்பாணம் வலய பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீடு செல்லும் ஆசிரியர் ஒருவரை தீவகப் பகுதியில் எவ்வாறு வளவாளராக நியமித்தீர்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் வட மாகாண கல்விப் பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆளுநரின் செயலாளர் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளருடன் நடைபெற்ற சந்திப்பில் வைத்தே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
மதில் பாய்ந்து வீடு செல்லும் ஆசிரியர்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரங்களில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் ஆசிரியர் தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகளை கல்வி அமைச்சுக்கு வழங்கியிருந்தோம்.
அந்த ஆசிரியர் மீது ஒழுக்காற்று விசாரணைகள் எவையும் இடம்பெறாத நிலையில் தீவக வலயத்திற்கு தமிழ் பாட வளவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுமதி வழங்கியது யார்?
ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய பண்புகள் இல்லாத ஒருவர் ஒரு வலயத்தின் ஆசிரிய வளவாளராக நியமிப்பதற்கு அனுமதி வழங்கியது யார்? என கேட்டுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த வட மாகாணக் கல்விப்
பணிப்பாளர், பல ஆசிரியர்கள் பாடசாலையில் வெற்றிலை போடுகின்றனர் என்று எமக்கு
பல முறைப்பாடுகள் வருகின்றன. ஆசிரியர்களின் ஒழுக்கம் தொடர்பில் ஆசிரியர்
சங்கங்கள் தான் வழிப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
