23 வருடங்களில் தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சி! தீவிரமாகும் நெருக்கடி!
கடந்த 23 வருடங்களில் முதல் தடவையாக இலங்கையின் முக்கிய தேயிலை ஏற்றுமதி குறைந்துள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைனில் போர் மற்றும் உரத்தடை என்பனவே இதற்கான பிரதான காரணங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தீவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையை தேயிலை கொண்டிருக்கிறது.
தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு முன்னர் தேயிலை ஏற்றுமதி வருடத்துக்கு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியது.
இது 1948 இல் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான நிலையாகும்.
சுங்கத் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் முதல் காலாண்டு தேயிலை ஏற்றுமதி 63.7 மில்லியன் கிலோவாக சரிந்துள்ளது,
இது கடந்த ஆண்டு ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 69.8 மில்லியன் கிலோவாக இருந்தது.