மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் அரசாங்கம்! நடைமுறைக்கு வரவுள்ள புதிய வரி
2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாட்டில் சொத்து வரியை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
ஐஎம்எப் உறுதியாக இருக்கின்றது
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரி வருமானத்தை கடுமையாக உயர்த்த வேண்டும் என்று ஐஎம்எப் இலங்கைக்கு நிபந்தனை விதித்துள்ளது.
7.3 வீதமாக இருக்கும் வரி வருமானத்தை 12 வீதத்திற்கு மேலே கொண்டு போய் இன்னும் 2 வீதம் மேலதிகமாக பெறப்பட வேண்டும் என்பதில் ஐஎம்எப் உறுதியாக இருக்கின்றது.
இதன் காரணமாக எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சொத்து வரியை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதுடன், அது தொடர்பில் நிதி அமைச்சின் விசேட செயலணி ஒன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகின்றது.
மக்கள் என்று வருகின்றபோது வரி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் எவ்வித தயக்கமும் காட்டாமல் உடனடியாக வரிச்சுமையை மக்கள் மீது சுமத்தி அதன் மூலம் வருமானத்தை அதிகரித்து இன்னும் இரண்டு வீதம் அதிகரிக்க சொத்து வரியை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகின்றது என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |