வரி இலக்கத்தால் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வருமான வரி செலுத்த பதிவு செய்தவர்களுக்கு மற்றுமொரு புதிய வரி இலக்கங்கள் வழங்கப்படுவதால் வரி செலுத்துவோர் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இரண்டு வரி எண்களை பெற்ற வரி செலுத்துவோர் ஒருவருக்கு இரண்டு வரி பதிவு எண்களை வழங்கியதன் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பெறப்பட்ட வரி எண்ணிற்கமைய, வரிக் கணக்குகளை மின்னணு முறையில் ஒன்லைனில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வரி பதிவு எண்
இந்த வரி விதிப்பு முறையானது, நாட்டின் ஏழை மக்களுக்கு இது போன்ற ஒன்லைன் வசதிகளோ, அது தொடர்பான தொழில்நுட்ப அறிவோ இல்லாததால், கடும் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் வரி செலுத்துவோர் தெரிவித்துள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், அஸ்வெசும, சமுர்த்தி பெறுனர் ஆகியோரும் வரி இலக்கங்களை பெறுவது மிகவும் அபத்தமான நிலை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

வசீகரிக்கும் அழகுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
