சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் - மக்கள் எழுச்சிக் கட்சி
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (27.08.2025) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும்
கூறுகையில்,
ரணில் கைதுக்கு ஓடிச்சென்று விடுவிக்க முயற்சிக்கும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்று செயற்படுவது அவரது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்கான விசுவாசத்தையும் காட்டுகின்றது.
ரணிலின் கைது பாடமாக இருக்கும்
நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து ஆட்சியில் நிழல் ஆட்சியாளர்களாக இருந்த இவர்கள் அன்றும் ரணிலைக் கொண்டு தமது தேவைகளையே நிவர்த்தி செய்து இலட்சாதிபதியாகினர்.
தற்போது ரணில் கைதானவுடன் அனைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக போராடுகின்றனர். இது ஊழல்வாதிகளான தமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றது.
அந்தவகையில் ரணிலின் விடுவிப்பில் அவரது நோயின் தன்மையே தாக்கத்தை செலுத்தியது. எனவே மக்களின் நலன்களையும் அவர்களது சொத்துக்களையும் யார் துஷ்பிரயோகம் செய்தாலும் அவர்களுக்கு இந்த ரணிலின் கைது பாடமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
