எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை! அமைச்சர் விஜித ஹேரத்
நாட்டில் இன்று பல உதிரிகளாக பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணி என்று தற்போது ஒன்றும் இல்லை."என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது"மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி உரிய வகையில் நிறைவேற்றி வருகின்றார்.
உறுதிமொழிகள்
அனைத்து உறுதிமொழிகளையும் 24 மணிநேரத்துக்குள் நிறைவேற்றிவிட முடியாது. கட்டம் கட்டமாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புரிந்துணர்வு மக்களுக்கு உள்ளது.

அரசின் பயணம் மிகச் சிறப்பாகவே சென்றுகொண்டிருக்கின்றது. ஆனால், எதிரணிகள்தான் வங்குரோத்து அடைந்துள்ளன. இன்று பலமான எதிரணி என்று ஒன்றும் இல்லை.
அதனால்தான், அரசுக்கு எதிராகப் போலிப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.
மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்."என தெரிவித்துள்ளார்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri