100 நாள் செயல்முனைவின் 30 வது நாள் போராட்டம் இன்று
மட்டக்களப்பு -தன்னாமுனையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கோரியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
100 நாட்கள் செயல்முனை போராட்டம்

'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 30 வது நாள் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சர்வதேச தினத்தையிட்டு அவர்களுக்கு நீதிகோரியும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் கண்டுமணி லதன் தலைமையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேசமே நீதியை பெற்றுத்தா

ஏறாவூர் தன்னாமுனை பஸ்தரிப்பு நிலையத்துக்கு முன்னால் ஒன்றிணைந்த பொதுமக்கள் “நடமாடும் சுதந்திரம் எங்கள் உரிமை”, “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்”, “மத சுதந்திரத்தை தடுக்காதே”, “இலங்கையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு”,“காணாமல் போன உறவுகளுக்கு சர்வதேசமே நீதியை பெற்றுத்தா” போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri