அரசியல் தீர்வு கோரி 21ஆவது நாளாக தொடரும் மக்கள் போராட்டம் (VIDEO)
"வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்" எனும் 100 நாட்கள் செயல்முனை போராட்டம் 21ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவேகானந்தபுரத்தில் இப் போராட்டம் இன்று இடம்பெற்றது.
அரசியல் தீர்வு
இதன் போது வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான விளக்கங்கள் தெளிவுபடுத்தப்பட்டதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய கலைகளில் ஒன்றான கூத்து பாடல் இசைக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் கிராம மக்கள், கிராம பெண்கள் சிறுகுழுக்கள், பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அடிப்படை உரிமைகள் பாதுகாக்க வேண்டும்
இதன் போது பின்தங்கிய கிராமத்தில் வாழும் மக்களின் பொருளாதார நிலை மற்றும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என கருத்துக்கள் முன்வைத்தனர்.
அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இதற்கான உரிய நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.