'புனர்வாழ்வுப் பணியகம்' சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இலங்கை அரசாங்கத்தின் 'புனர்வாழ்வுப் பணியகம்' என்ற தலைப்பிலான சட்டமூலத்தை எதிர்த்து, இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
சட்டமூலம்
'போதைப்பொருள் சார்ந்தவர்கள், முன்னாள் போராளிகள், வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் வேறு எந்த குழுவிற்கும் மறுவாழ்வுக்காக ஒரு பணியகத்தை நிறுவுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த சட்டமூலத்தின் பிரிவுகள் சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும், வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் சார்ந்தவர்களுக்கு எவ்வாறு மாறுபட்ட அணுகுமுறையில் மறுவாழ்வு வழங்கப்படும் என்று குறிப்பிடப்படவில்லை என்றும் மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தெளிவற்ற மற்றும் தன்னிச்சையான வகைப்பாடு
அந்தவகையில், சட்டமூலமானது, தெளிவற்ற மற்றும் தன்னிச்சையான வகைப்பாடுகளை கொண்டுள்ளது.
அத்துடன் போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள் கூட புனர்வாழ்விற்காக தடுத்து வைக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ள சற்குணநாதன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் போராட்டக்காரர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சட்டமூலத்தின் கீழ், புனர்வாழ்வு செயல்முறை இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என்றும், சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரங்கள், கடமைகள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்கும், ஆயுதப்படையின் எந்தவொரு உறுப்பினரையும் ஜனாதிபதி நியமிக்க அனுமதிக்கிறார் என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மை
எனவே, மனுவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள சட்டமூலத்தின் பல பிரிவுகள், மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மையை மீறுவதால், இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது என்று அதனை அறிவிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்,
காலிமுகத்திடல் போராட்டத்தின் முன்னணியாளர் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ்
உட்பட்டவர்கள், சட்டத்தரணி அமிலா சுயாமா எகொடமஹாவத்த ஆகியோரும் இந்த
சட்டமூலத்துக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

அதிரவைக்கும் பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம் News Lankasri
